பாஸ்வேர்ட் பகிரவ்வு.. நெட்பிளிக்ஸ் பாணியில் SWIGGY-யும் அதிரடி

x

ஓடிடி ப்ளாட்ஃபார்மில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான நெட்பிளிக்ஸை போல் பாஸ்வேர்ட் பகிர்வதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது, ஸ்விக்கி.

ஸ்விக்கி ஒன் ப்ரீமியம் மெம்பர்ஷிப் வாடிக்கையாளர்கள் இனி முன்பு போல் எத்தனை மொபைல் போனில் இருந்து வேண்டுமானாலும் தங்களின் அக்கவுண்ட்டிற்குள் லாகின் செய்ய முடியாது. ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக இரண்டு கருவிகளில் இருந்து லாகின் செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே எதிர்பார்த்த லாபம் ஈட்ட முடியாத காரணத்தினால் கடந்த மாதம் சுமார் 380 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருந்தது, ஸ்விக்கி.

இப்படி ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்து வந்த ஸ்விக்கி நிறுவனம் தற்போது நெட்பிளிக்ஸ் பாணியில், பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்