IranIsrealWar | வாக்கை மீறி மாறி மாறி தாக்குதல்.. கடைசி எச்சரிக்கை கொடுத்த ஈரான் -நடுக்கத்தில் உலகம்
போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி குற்றம் சாட்டின. போர் நிறுத்தத்திற்கு ஈரானும் இஸ்ரேலும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அதிகாலை அறிவித்தார். ஆனால், அதன் பின்னர், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேலின், பீர்ஷேபா (Beersheba) பகுதியில் ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டன. போர் நிறுத்த அறிவிப்பை மீறும் வகையில் ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில், போர் நிறுத்தத்தை மீறி, ஈரான் வான்பரப்பை அத்துமீறி இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், போர் மீண்டும் மூளும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.