Venezuela Issue | Trump | வெனிசுலா விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா
வெனிசுலா விவகாரத்தில் யூடர்ன் அடித்த அமெரிக்கா
வெனிசுலாவை அமெரிக்கா நேரடியாக நிர்வகிக்கும் என அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், அதுபோன்ற நிலைப்பாடு எதுவும் இல்லை என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவை அமெரிக்காவே நேரடியாக நிர்வாகம் செய்யும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அது போன்ற நிலைப்பாடு எதுவும் இல்லை என்றும், போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கும், வெனிசுலாவில் எண்ணெய் வளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.