அமெரிக்காவில் வைர தோடுகளை திருடிய நபர், போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க விழுங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள பிரபலமான வைர நகைக்கடக்கு சென்ற ஜேதன் லாரன்ஸ் கில்டர் (Jaythan Lawrence Gilder) என்பவர், உள்ளூர் கூடைப்பந்து வீரர் எனக்கூறி நகைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது, திடீரென ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள 2 வைர தோடுகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் பிடித்தபோது, கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக தோடுகளை விழுங்கினார். அவரிடம் தோடு இல்லாத நிலையில், கைது செய்வதற்கு இடையேறு செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவரது வயிற்றில் தோடுகள் இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து எடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.