Ukraine Army காயமடைந்த வீரர்களை ஹாஸ்பிடலுக்கே வந்து பாராட்டிய ஜெலன்ஸ்கி
உக்ரைன் ராணுவ தினம் - காயமடைந்த ராணுவ வீரர்களை வாழ்த்திய 'ஜெலன்ஸ்கி'
உக்ரைனில் ராணுவ தினத்தையொட்டி, கீவ் பகுதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயமடைந்த ராணுவ வீரர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களிடம் நலம் விசாரித்த அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ தினத்தையொட்டி நினைவு பரிசுகளை வழங்கி விரைவில் குணமடைய வாழ்த்தினார். குறிப்பாக, ரஷ்யாவுடனான போரில் நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகத்தை வெகுவாக பாராட்டினார்.