Turkey | Plane Crash | 20 பேருடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - பலத்த சத்தம்.. திக் திக் காட்சி
அஜர்பைஜானில் இருந்து துருக்கிக்குத் திரும்பும் வழியில் துருக்கி ராணுவ விமானமான C-130 ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.. முன்னதாக அஜர்பைஜானிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானத்தின் விமான வழி பாதையை காட்டும் வீடியோவும் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியிடவில்லை. இந்த நிலையில், உயிரிழந்தோருக்கு துருக்கி அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.