Trump | Saudi Prince | அமெரிக்கா விரித்த சிவப்பு கம்பளம்..கோலாகலமாக வந்த சவுதி பட்டத்து இளவரசர்
சவுதி அரேபியாவை நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடாக முறையாக நியமிப்பதாகவும், இதன்மூலம் தங்கள் ராணுவ ஒத்துழைப்பை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர், கைகுலுக்கி வரவேற்றனர்.