Trump News | Traffic | அமெரிக்காவில் இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரி- டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரி விதிப்பு, வரும் நம்பவர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.