Trump | Meloni | America | "அழகி மெலோனி.." பதற்றமான மேடையில் திரும்பி பார்த்து வர்ணித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப். இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்த மாநாட்டின்போது திடீரென இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை புகழ்ந்தது நிகழ்ச்சி மேடையைக் கலகலப்பாக்கியது. தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மெலோனியை பார்த்து, அவர் மிகவும் அழகாக இருப்பதாக கூறிய டிரம்ப், இவ்வாறு அமெரிக்காவில் ஒரு பெண்ணை புகழ்ந்தால், அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்றார். ஆனால் அதுபற்றி தனக்கு கவலையில்லை என டிரம்ப் நமட்டு சிரிப்புடன் கூறியது அங்கிருந்தவர்களை நகைப்பில் ஆழ்த்தியது.