டிரம்புக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

Update: 2025-09-09 09:02 GMT

அமெரிக்காவில் பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட 83.3 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அதிபர் டிரம்ப் தாக்கல் செய்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண் எழுத்தாளர் ஜீன் கரோலின் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்ததால், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 83.3 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து டிரம்ப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் நியாயமானது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்