வரலாற்றில் இன்று : வியட்நாம் மீது படையெடுத்த சீனா..! டூ சூயஸ் கால்வாயில் சென்றது முதல் கப்பல்
1670
சின்ஹாகாட் கோட்டையை வென்ற சத்ரபதி சிவாஜி
பல போர்களின் தளமாக இருந்த மகாராஷ்டிராவில் உள்ள Sinhagad கோட்டை 1670ல் முகலாயர்களிடமிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் கைப்பற்றப்பட்டது இதே நாளில் தான்...
17 February 1867 – The first ship passed through the Suez Canal.
1867
சூயஸ் கால்வாயில் சென்ற முதல் கப்பல்
1867ம் ஆண்டு இதே நாளில், சூயஸ் கால்வாய் வழியாக முதல் கப்பல் பயணித்தது... மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் எகிப்தில் உள்ள இந்த சூயஸ் கால்வாய் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது...
17 February 1931 – Lord Irwin welcomed Gandhiji at the Viceroy’s residence.
1931
காந்தியை தன் இல்லத்திற்கு வரவேற்ற லார்டு இர்வின்
1931ம் ஆண்டு பிப்ரவரி 17ல் தான் மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் வைசிராயாக இருந்த லார்டு இர்வின் தனது இல்லத்திற்கு வரவேற்றார்... இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகித்த காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கு இந்தச் சந்திப்பே வழிவகுத்தது...
17 February 1934 – Belgian King Albert I died while mountaineering.
1934
மலை ஏறும்போது கீழே விழுந்து பலியான மன்னர்
1934ல் இதே நாளில் மலையேறும் வீரராகவும் அறியப்பட்ட பெல்ஜியம் மன்னர் முதலாம் ஆல்பர்ட் பெல்ஜியத்தின் ஆர்டென்னஸ் பகுதியில் உள்ள மார்ச்சே-லெஸ்-டேம்ஸ் நகருக்கு அருகில் மலையேறும் போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்...
1979
வியட்நாம் மீது படையெடுத்த சீனா...
வியட்நாம் மீது பிப்ரவரி 17ல் தான் சீனா படையெடுத்தது...
1978 ஆம் ஆண்டில் வியட்நாம் கம்போடியா மீது படையெடுத்ததில் சீன ஆதரவு பெற்ற கெமர் ரூஜின் ஆட்சி முடிவுக்கு வந்தது... இதற்கு பதிலடி கொடுக்க
சீனா வியட்நாம் மீது படையெடுத்தது...
1991
பாடகர் எட் ஷீரன் பிறந்த நாள்
உலகப் புகழ்பெற்ற ஆங்கில பாடகர் எட் ஷீரன் பிறந்த நாள் இன்று... 1991ம் ஆண்டு பிறந்த எட் ஷீரனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்...