ரஷ்யாவின் கொடூர தாக்குதல் - உருக்குலைந்த காட்சிகள்

Update: 2025-02-11 06:09 GMT

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமி Sumy நகரத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா அனுப்பிய 83 ட்ரோன்களில், 61 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அதேநேரம் குடியிருப்பு கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால், 5 வீடுகள் சேதமடைந்தன. கட்டிடங்களில் கொளுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்