ரஷ்ய படைகளுக்கு பேரிடி.. ஷாக்கில் புதின் | Vladimir Putin | Russia | Thanthitv

Update: 2024-05-25 13:35 GMT

கார்கிவ் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ராணுவ உயர் அதிகாரிகளிடம் காணொலி மூலம் பேசிய அவர், கார்கிவ் பகுதிக்குள் நுழைய முயன்றவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்து விரட்டியதாக தெரிவித்தார். ரஷ்யா எல்லையில் இருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்