Russia Belarus | ஒன்று கூடிய ரஷ்யா - பெலாரஸ் படைகள் | சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவங்கள் இணைந்து 2வது நாளாக போர் ஒத்திகை மேற்கொண்டன. 'ஜபாட் 2025' (Zapad) எனப் பெயரிடப்பட்ட இந்த போர் ஒத்திகையானது, இரு நாடுகளிலும் உள்ள பால்டிக் மற்றும் பேரண்ட்ஸ் (Baltic and Barents seas) கடல் பகுதியில் நடைபெற்றது. ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்டு ராணுவத்தின் திறன்களை மேம்படுத்துதல், போர் உக்திகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி இதில் ஒத்திகை செய்யப்பட்டதாக ரஷ்யா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.