ரஷ்யாவுக்கு மட்டும் `நோ' Tax - வீரன் பம்மிய பின்னணி

Update: 2025-04-04 12:09 GMT

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு வரிவிதிக்கவில்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 50 சதவீதம் வரிவிதிப்பேன் என்று கடந்த மாதம் உலக நாடுகளை மிரட்டிய டிரம்ப், ரஷ்யாவுக்கு வரி விதிக்காதது கவனம் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து 3.5 பில்லியன் டாலர், இந்திய ரூபாயில் 29 ஆயிரத்து 802 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. உரங்கள், அணு எரிபொருள் மற்றும் சில உலோகங்களை அமெரிக்கா இறக்குமதி செய்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் உக்ரைனுக்கு 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்