PM Modi | Donald Trump | தலைப்பு செய்தியையே மாற்றிய டிரம்புக்கு பிரதமர் மோடி அனுப்பிய மெசேஜ்
எகிப்தில் உள்ள ஷர்ம்-எல்-ஷேக் நகரில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி, துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் அரசர் உள்ளிட்டோரும் கையெழுத்திடனர். மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், இந்த ஒப்பந்தம் மூலம், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதிக்கும் அழகான புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
காசா போர் நிறுத்தம் மட்டுமின்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாத எதிராக போராடுவதுடன், இந்த பகுதியை வலிமையான, வளமான, ஸ்திரத்தன்மை வாய்ந்ததாக உருவாக்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.