உள்ளே நுழைந்த பாகிஸ்தான்.. அட்டாக் கன்பார்ம் - திருப்பி அடித்த இந்தியா.. எல்லையில் உச்சகட்ட பரபரப்பு
ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நவ்ஷேரா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.