தேடி வந்த ஆஸ்கர் விருதுகள்... உலகையே பேச ஒற்றை படம்

Update: 2025-03-03 17:19 GMT

தேடி வந்த ஆஸ்கர் விருதுகள்... உலகையே பேச ஒற்றை படம்

97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா - அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது - பாரம்பரிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது - கண்கவர் ஆடைகளில் பிரபலங்கள் ஒய்யார நடை.

சீன் பேக்கர் Sean Baker இயக்கிய 'அனோரா' Anora திரைப்படம் - 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது - சிறந்த திரைப்படம் - சிறந்த திரைக்கதை - சிறந்த இயக்குநர் - சிறந்த நடிகை - சிறந்த படத்தொகுப்பு -

'விக்கெட்' (Wicked) திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருதை பெற்றார் பால் டேஸ்வெல் (Paul Tazewell). சிறந்த தயாரிப்புக்கான ஆஸ்கர் விருதையும் விக்கெட் (Wicked) திரைப்படம் வென்றது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'தி ரியல் பெயின்' (A Real Pain) படத்திற்காக கீரன் கல்கின் (kieran-culkins) வென்றார்.

எமிலியா பெரஸ் (Emilia Perez) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை நடிகை ஜோ சால்டனா (Zoe Saldana) பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்