எல்லாம் சுமூகமாக கூடி வரும் நேரத்தில் போட்டு உடைத்த Netanyahu - Israel-ல் வெடித்த பெரும் போராட்டம்

Update: 2025-09-14 06:04 GMT

டிரம்பை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் நெதன்யாகு“ - போராட்டம்

இஸ்ரேலில், ராட்சத அளவிலான பதாகையை ஏந்தியவாறு, அமெரிக்க அதிபர் டிரம்பை ஏமாற்றுவதை நிறுத்த கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை வலியுறுத்தி, இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தடுத்தத்தற்கும், பணயக்கைதிகள் ஒப்பந்தத்தைத் தடுத்ததற்கும் நெதன்யாகுவைக் கண்டித்து இஸ்ரேல் மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த செவ்வாய் கிழமையன்று, கத்தாரில் தாக்குதல் நடத்தி, ஹமாஸின் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றது. இந்த தாக்குதல் காசாவில், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்துவரும் போர் முடிவு பேச்சுவார்த்தையை தடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்