சிதைந்த கட்டிடங்கள்.. உள்ளே 40 மணி நேரமாக துடித்த இதயம் - கடைசியில் நடந்த பெரிய ட்விஸ்ட்
மியான்மர் தலைநகர் நைபியிடவில் (Naypyidaw) இடிபாடுகளில் சிக்கி தவித்த இளைஞர், 40 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 3 அடுக்குமாடி கட்டட இடிபாடுகளில் சிக்கி தவித்த அவரை, சிங்கப்பூர் மீட்பு குழுவினர் மீட்டனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 700ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.