Isreal Gaza War | Isreal Amry | தடையாக நிற்கும் இஸ்ரேல் - களமிறங்கிய ஸ்பெயின், இத்தாலி கப்பல்கள்
காசாவிற்கு உதவிகளை வழங்க முயன்றபோது ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சர்வதேச ஏற்பாட்டாளர்கள் பயணிக்கும் 50 சிறிய கப்பல்களுக்கு ஆதரவாக இத்தாலி இரண்டாவது கடற்படை கப்பலை அனுப்பி வைத்துள்ள நிலையில், ஸ்பெயினும் தனது கடற்படை கப்பலை அனுப்பி வைத்துள்ளது. மனிதாபிமான உதவிகளையும் நூற்றுக்கணக்கான மனித உரிமை பார்வையாளர்களையும் ஏற்றிச் செல்லும் 50 கப்பல்கள் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆளான நிலையில், தற்போது அவற்றிற்கு அரணாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் கப்பல்கள் களமிறங்கி இருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.