Isreal Army | Netanyahu | "லேசரில் இயங்கும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்" - இஸ்ரேல்
இஸ்ரேலில், ஏவுகணைகளை அழிக்கும் சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஏவுகனையை அழிக்கும் அந்த அமைப்பு இந்த ஆண்டு இறுதியில் இராணுவத்தால் செயல்பாட்டு பயன்பாட்டிற்கு வரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலிடம் உள்ள ராக்கெட் இடைமறிப்பான்கள் ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் டாலர்கள் செலவாகும் எனவும், ஆனால் இந்த புதிய லேசர் மூலம் செயல்படும் அமைப்பால் ஆகும் செலவு அதைவிட குறைவு எனவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு லேசர் அமைப்பு குறித்து இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.