Israel Hamas War | போரை நிறுத்த சம்மதம்?.. உலகமே எதிர்பார்த்த முடிவை எடுத்த நெதன்யாகு
Uகாசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச செயல்திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது.இந்த செயல் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டால், பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஹமாஸ் ராணுவ கட்டமைப்புகள் கலைக்கப்படும் என்றும் தெரிவித்தார். காசாவில் உள்ள இஸ்ரேலிய படைகள் படிப்படியாக வெளியேறும் என்றும் தெரிவித்தார். ஒருவேளை இந்த செயல்திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தால், இஸ்ரேல் சுதந்திரமாக செயல்பட்டு தனது இலட்சியத்தை அடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.ploaded On 30.09.2025