Israel | Hamas | ஹமாஸின் பிடியிலிருந்து மீண்டு வந்த மகன்.. பாசத்தை பொழிந்த தாய்

Update: 2025-10-09 08:41 GMT

ஹமாஸின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட தனது மகனை இஸ்ரேலில் தாயார் ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றார்.

இஸ்ரேல், ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக ஹமாஸிடம் இருந்த இஸ்ரேல் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பினர். அவர்களை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்றனர். அப்போது ஹமாஸின் பிடியிலிருந்து மீண்டு வந்த தனது மகனை தாயார் கட்டித் தழுவி பாசத்தைப் பொழிந்தார்.

இதேபோல பலரும் ஹமாஸின் பிடியிலிருந்து வீடு திரும்பியதால், அந்தப் பகுதியே உணர்ச்சிபூர்வமாக காட்சியளித்தது. தங்களது குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்பியதை பட்டாசு வெடித்து இஸ்ரேல் மக்கள் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்