Israel Attacks Lebanon | லெபனானுக்குள் புகுந்து அடித்த இஸ்ரேல்.. மீண்டும் தொற்றிய பதற்றம்.
தெற்கு லெபனானில் உள்ள சைடன் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்நிலையில், ஐன் அல்-ஹில்வே பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த போராளிகளைத் தான் தாக்கியதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது... இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த பாலஸ்தீன இயக்கமான ஹமாஸால் இந்த வளாகம் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் கூற்று முற்றிலும் கட்டுக்கதை என ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. முகாமில் உள்ள திறந்தவெளி மைதானத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாகவும், லெபனானில் உள்ள அகதிகள் முகாம்களில் எந்த போராளிகளும் இல்லை எனவும் ஹமாஸ் தெளிவுபடுத்தியுள்ளது.