Indonesia | இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்.. உள்ளே சிக்கிய 63 பேர் 1 வாரம் கழித்து வந்த செய்தி
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்துக்கு உட்பட்ட சிடோர்ஜா நகரில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். கடந்த வாரம் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் சுமார் 50 பேரின் சடலங்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 13 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.