India Israel Deal | நடுவானிலேயே இனி நடக்கும்.. இஸ்ரேல் உடன் இந்தியா சம்பவம்
வானில் விமான எரிபொருள்-ரூ.8,000 கோடிக்கு இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்
இந்திய விமானப்படைக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விமான ஒப்பந்தத்தை இஸ்ரேலிய நிறுவனம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய விமானப்படை, புதிய வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களைச் சேர்க்கும் திட்டத்தின் கீழ், இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து 6 டேங்கர் விமானங்களை வாங்க 8 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.