``இந்தியா, பாக். இடையே 1000 ஆண்டு பிரச்சினையை முடித்துவிட்டேன்'' -டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய ஆயிரம் ஆண்டு பிரச்சினையை முடித்து வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹா நகருக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லுசைல் (Lusail) அரண்மனையில் நடந்த விருந்தில், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, போயிங் சிஇஓ கெல்லி, எலான் மஸ்க் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தோஹா அருகே உள்ள அமெரிக்காவின் அல் உதைத் (Al Udeid Air Base) விமானப் படைத்தளத்திற்கு சென்ற டிரம்ப், அமெரிக்க வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே ஆயிரம் ஆண்டுகளாக சண்டை நடப்பதாக கூறினார். அந்த பிரச்சினையை, தான் முடித்து வைத்ததால், இரு நாடுகளும் மகிழ்ச்சியில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.