நைஜீரியாவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - 30 பேர் பலி
நைஜீரியாவின் நைஜர் நகரில் சந்தையில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் அண்மையில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம கும்பல், 300 மாணவர்களை சிறைபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சந்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.