Ghost Town | அலறவிடும் பேய் நகரம்.. பீதியை கிளப்பும் ஒற்றை கழுதைப்புலி..!
தெற்காப்பிரிக்க நாடான நமீபியாவுல எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்னுக்கு சர்வதேச அளவுல அங்கீகாரம் கிடைச்சுருக்கு.. அப்படி என்ன புகைப்படம் அதுனு எல்லாரும் ஆர்வமா பாத்துட்டு இருப்பீங்க... Kolmanskop...ஒரு காலத்துல செல்வம் கொழிச்ச வைர சுரங்க சொர்க்கமா பாக்கப்பட்ட இந்த நகரத்த எல்லாரும் இப்ப பேய் நகரம்னு தான் சொல்றாங்க...ஏன்?...இங்கருக்க வைர சுரங்கங்கள் எப்பவும் பிசியா இருந்த காலகட்டம் 1900 சமயங்கள்...ஆனா அதுக்கப்றம் வைரத்தோட இருப்பு இல்லாம போகவும் அப்டியே மக்கள் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறி கடைசியா மொத்த நகரமும் யாருமே இல்லாம கைவிடப்பட்டுருச்சு...அங்கிருந்த கட்டடங்கள பாலைவன மணல்கள் நிரப்புச்சு...ஆள் அரவம் இல்லாத பேய் நகரமா பார்க்கப்பட்டுச்சு மக்களால...இப்ப எல்லாரும் பாக்க விரும்புற சுற்றுலா தலமா இருக்கு....இங்கதான் Wim van den Heever அப்டின்ற புகைப்படக் கலைஞர் கிட்டத்தட்ட 10 வருடங்களா பொறுமையா காத்துக்கிட்டு இருந்தாரு...எதுக்கு தெரியுமா?...இதோ இந்த ஒரு நொடிக்காக தான்...கழுதைப் புலி...அங்கருக்க பாழடைஞ்ச கட்டடத்துக்கு முன்னாடி ராத்திரி 2 மணிக்கு வந்து நின்னு ஒரு பார்வ பாத்துச்சு பாருங்க...அந்த புகைப்படம் தான் விம்முக்கு 2025ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்ங்குற விருத வாங்கிக் கொடுத்துருக்கு...இந்த ஒரே ஒரு புகைப்படம்...பேய் நகரமும்...ஒற்றை கழுதைப் புலியும் தான் உலகம் முழுக்க பேசுபொருளாகிருக்கு...