Germany PolioVirus | முதல் ரக போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு - ஜெர்மனியில் பேரதிர்ச்சி
கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போலியோ வைரஸின் 2-ஆவது ரகம் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஹாம்பர்க்கில் முதல் ரக போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்ற போதிலும், முறையான தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடும் என ஜெர்மனி சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் போலியோவை முற்றிலும் ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், ஜெர்மனியில் அடுத்தடுத்து வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.