Gaza | 60,933 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. நாளுக்கு நாள் உயரும் பலி எண்ணிக்கை
Gaza | 60,933 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. நாளுக்கு நாள் உயரும் பலி எண்ணிக்கை
இஸ்ரேல் படைகளால் 60,933 பாலஸ்தீனியர்கள் கொலை
காசாவில் போர் துவங்கியது முதல் இதுவரை இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 27 பேர் இதுவரை படுகாயமடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 439 பேர் படுகாயமடைந்துள்ளனர்... தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவின் வடக்கே ஒரு உதவி விநியோக நிலையத்திற்கு அருகில் 2 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காசா ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை தெரிவித்துள்ளது. மத்திய காசாவில் உள்ள நுசைரத் அகதிகள் முகாமையும் இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்கின... கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனிய செம்பிறை சங்க தலைமையகத்தை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாகவும், முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.