தண்ணீரில் மிதந்த சாலைகள்..தத்தளிக்கும் தலைநகரம் அதிர்ச்சியூட்டும் காட்சி
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் கேபரோன் (Gaborone) உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. கனமழை, வெள்ளம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக, போட்ஸ்வானா அதிபர் டுமோ போகோ (Dumo Boko) தெரிவித்தார்.