பாதாள அறைகளுக்குள் செல்லும் சீன மக்கள் - என்ன நடக்கிறது அங்கே?

Update: 2025-05-23 02:45 GMT

வான்வழித் தாக்குதல்கள் நடந்தா தப்பிக்குறதுக்காக பயன்படுத்தப்படுற பாதாள அறைகள...வெயில்ல இருந்து தப்பிக்குறதுக்காக பயன்படுத்துறாங்க சீனர்கள்... அந்தளவு அங்க வெயில் வாட்டி வதச்சுக்கிட்டு இருக்கு...

தென்மேற்கு சீனா சிச்சுவான் மாகாணத்துல செங்குடுல No.1 Air-Raid Shelter இருக்கு...

உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் கொளுத்துற வெயில்ல தங்கள கூலாக்கிக்குறதுக்காக இங்க வந்து தஞ்சம் அடையுறாங்க....

2010ல இருந்தே ஒவ்வொரு சம்மர் அப்பவும் இங்க ஃப்ரீ என்ட்ரி...ஒரே நேரத்துல 400 பேர் வரைக்கும் தங்கலாம்...

இந்த வருஷம் சூரியன் காட்டு காட்டுனு காட்டுறதால...வழக்கத்த விட முன்னாடியே ஓப்பன் பண்ணிட்டாங்க...

நிழலுக்கு ஒதுங்குன மாரியும் ஆச்சு...உள்ள நிறைய விஷயங்கள தெரிஞ்சுகிட்ட மாதிரியும் ஆச்சு...

Tags:    

மேலும் செய்திகள்