Canada | KapilSharma Restaurant|கனடாவில் பதற்றம்..இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

Update: 2025-08-08 09:18 GMT

கனடாவில் பதற்றம்.. இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

கனடாவில் இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

கனடாவில் உள்ள இந்திய காமெடி நடிகர் கபில் ஷர்மாவுக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த கபில் ஷர்மா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்ற இடத்தில் உணவகம் ஒன்றை திறந்தார். கடந்த மாதம் இந்த உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காலிஸ்தான் பயங்கரவாதி பொறுப்பேற்ற நிலையில், 2வது முறையாக மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பல முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் கண்ணாடி, ஜன்னல் சேதமடைந்த நிலையில், கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கோல்டி தில்லான் Goldy Dhillon என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்