வாரத்தில் வெறும் 4 நாள் மட்டுமே வேலை.. அங்கே நிரந்தரமாக்க முடிவு

Update: 2025-01-28 09:04 GMT

பிரிட்டனில் ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை நிரந்தரமாக்க 200 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நிரந்தரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த நாட்கள் வேலை செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வேலைக்கான இலக்கை எட்டுவதோடு, உற்பத்தி திறனும் பாதிக்கப்படவில்லை எனவும் ஊதிய இழப்பு இல்லாமல் நான்கு நாள் பணி என்பது முதலாளிகளுக்கு வெற்றியை ஏற்படுத்துவதாகவும் ஆதரவு நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்