கிரீன்லாந்தை அச்சுறுத்த வேண்டாம் என அமெரிக்காவுக்கு டென்மார்க் வேண்டுகோள்
டென்மார்க் பிராந்தியமான கிரீன்லாந்தை அச்சுறுத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு பிரதமர் மேத் ஃபிரெட்ரிக்சன் Mette Frederiksen வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக சிறைபிடித்த நிலையில், இந்த வேண்டுகோளை டென்மார்க் முன்வைத்துள்ளது.
கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், டென்மார்க் பிராந்தியமாக நீடிக்கவே கிரீன்லாந்து விருப்பம் தெரிவித்துள்ளது.