America | முதல் கோல் அடித்தவுடன் டெடி பியர் பொம்மைகளை வீசும் ரசிகர்கள் - வித்தியாச கொண்டாட்டம்
America | முதல் கோல் அடித்தவுடன் டெடி பியர் பொம்மைகளை வீசும் ரசிகர்கள் - அமெரிக்காவில் வித்தியாச கொண்டாட்டம்
அமெரிக்காவில் நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியின்போது ரசிகர்கள் மைதானத்தில் டெடி பியர் Teddy Bear பொம்மைகளை வீசி உற்சாகமடைந்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஹெர்ஷேயில் HERSHEY உள்ள மைதானத்தில், ஐஸ் ஹாக்கி லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதல் கோல் அடித்தவுடன் ரசிகர்கள் டெட்டி பியர் பொம்மைகளை மைதானத்தில் வீசுவது பாரம்பரிய நிகழ்வாகும். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். அந்த வகையில், ஹெர்ஷே பியர்ஸ் Hershey Bears அணிக்காக விளையாடிய லூயி பெல்பீடியோ Louie Belpedio என்ற வீரர், முதல் கோல் அடித்தவுடன், மைதானத்தில் ரசிகர்கள் டெடி பியர் பொம்மைகளை வீசினர். இந்த ஆண்டு 81 ஆயிரத்து 796 பொம்மைகள் சேகரிக்கப்பட்டதாகவும், எனினும், கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்க முடியவில்லை என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.