இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால், நெதர்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். காஸாவில் நடக்கும் போரால், இஸ்ரேயலிடம் இருந்து இறக்குமதி செய்வதை நெதர்லாந்து நிறுத்தவேண்டும் என நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் அவர் மசோதா கொண்டு வந்தார். ஆனால், அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததால், அந்த மசோதா தோல்வி அடைந்தது. இதனால் மனமுடைந்த அவர் தனது மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.