இன்றைய தலைப்புச் செய்திகள் (12-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-12 14:02 GMT

மழை பாதிப்பு = மத்தியக்குழு ஆய்வு

சென்னையில் புயல் வெள்ள பாதிப்பு ஆய்வை மத்தியக் குழுவினர் துவக்கினார்கள்...

வட சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு...

வேளச்சேரியில் மத்தியக் குழு ஆய்வு

மத்தியக் குழுவின் மற்றொரு பிரிவினர் சென்னை வேளச்சரியில் ஆய்வு...

கல்கி நகர், ராம் நகர், ஏ.ஜி.எஸ் காலனி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டனர்...

"எண்ணெய் கசிவு- சிபிசிஎல் நிறுவனமே காரணம்"

சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்...

எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்...

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம்?"

எண்ணூரில்எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி...

எண்ணெய் கலப்பால் பாதிக்கப்பட்ட கடைகள் மற்றும் குடும்பங்கள் எத்தனை எனவும் தமிழக அரசுக்கு கேள்வி...

"எண்ணெய் பரவும் வரை என்ன செய்தீர்கள்?"

11 கிலோ மீட்டர் தொலைவுக்கு எண்ணெய் பரவும் வரை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என சிபிசிஎல்லுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி...

எண்ணெய் கசிவை தடுக்க பூம்ஸ்-களை வைக்க முடியவில்லையா எனவும் காட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்