Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-11-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-11-19 00:56 GMT

பிரதமர் மோடி தலைமையில் வரும் 22ம் தேதி ஜி-20 நாடுகளின் கூட்டம்..காணொலி மூலம் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தகவல்...

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில், சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்.செங்குத்தாக 320 மீட்டர் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை..

தமிழக சட்டப்பேரவையில், 10 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் நிறைவேற்றம்..அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு.......... 10 மசோதாக்களும் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் வளர்ச்சிக்கு, அனைத்து வகையிலும் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவிதான் என்றும் சட்டப்பேரவையில் பேச்சு...

உச்சநீதிமன்றத்தில் மசோதாக்கள் வழக்கு நிலுவையில் உள்ளபோது சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டியது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி..வழக்கு வருவதற்கு முன் நமது தீர்மானம் ராஜ்பவனில் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் பதிலடி..

சட்டமுன்வடிவு என்னவென்றே தெரியாமல் வெளிநடப்பு செய்திருக்கிறது, அதிமுக...முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து.....

Tags:    

மேலும் செய்திகள்