Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.12.2025)| 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-12-24 01:13 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் வெளியிடுகிறார்... பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...

தூத்துக்குடி தவெக மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்... பதவி கேட்டு பெண் நிர்வாகி அஜிதா பனையூரில், தர்ணாவில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஆதாரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

புதுச்சேரியில் லெனின் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தில் பாஜக - கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது... லெனின் சிலை முன்பு விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய பாஜகவினர் முயன்ற நிலையில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்...

செங்கல்பட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான செவிலியர்களை உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் போலீஸார் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பேருந்தில் இருந்து இறங்க மறுத்த செவிலியர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது...

தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளூ பேர்ட் (blue bird) செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை விண்ணில் செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் செயற்கைக்கோள் எல்.வி.எம்-3 ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை என இன்று முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

பண்டைய ரோமானிய நகரமான பொம்பேயில் உள்ள கரடு முரடான பாதைகளில், உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடினார்... வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு ஜாக்கி சானுக்கு உற்சாக வரவவேற்பு அளித்தனர்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  புதிய டிஜிட்டல் தொடரான ​​"வைப் வித் எம்.கே.எஸ்" (vibe with MKS) இன்று மாலை வெளியாகவுள்ளது... தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாட உள்ளார்.,,,

80 கி.மீ தொலைவு வரை பறந்து சென்று அழிக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது... ஏவுகணை அமைப்பு விரைவில் இந்திய பாதுகாப்புபடையில் சேர்க்கப்படும் நிலையில், நாட்டின் வான் பாதுகாப்புத் திறன் பெரும் பலத்தைப் பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது...

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது... 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது...

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். 737 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தீப்தி சர்மா அசத்தியுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்