Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2025) |1 PM Headlines | ThanthiTV
சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது...
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது...
சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமையவுள்ளது...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சர்வதேச நகரம் அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது...
தந்தை பெரியாரின்147வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் பெரியார் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றார்...