மேட்ரிமோனியான சொமாட்டோ.. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்.. தலைசுற்ற விடும் ரிப்போர்ட்
Zomato உணவு விநியோக செயலி வெளியிட்ட தரவுகளின்படி புத்தாண்டு தினத்தன்று 4 ஆயிரத்து 940 பேர் தங்களுக்கு பெண் தோழிகள் வேண்டுமென தேடியுள்ளனர். மேலும் 40 பேர் தங்களுக்கு மணப்பெண் வேண்டும் எனவும் தேடியுள்ளனர்... இதனால் அது உணவு டெலிவரி செயலியா அல்லது மேட்ரிமொனி சைட் என நினைத்து விட்டார்களா என தெரியவில்லை... உண்மையிலேயே கேர்ள்ஃப்ரெண்ட் வேண்டுமென தேடினார்களா அல்லது கேர்ள் ஃப்ரெண்ட் என்ற பெயரில் துவங்கும் உணவகங்களைத் தேடினார்களா எனவும் புரியவில்லை. இதையடுத்து அந்நிறுவனம் விரைவில் திருமண தகவல் மையம் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்...