``நெல்லை ஹைவேயில் பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்கள்'' - பீதியில் பொதுமக்கள்

Update: 2025-05-25 10:28 GMT

வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்பு சாலை பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் இளைஞர்கள் விதிமுறைகளை மீறி விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனப்பதிவெண்ணை மறைத்தபடி இருசக்கர வாகனங்களை வைத்து சாகசம் செய்வதால் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சமூகவிரோத செயல்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்