Ramanathapuram | Exam Result | பெற்றோர் தலையில் பேரிடியாய் இறங்கிய 10ம் வகுப்பு மாணவியின் ரிசல்ட்
Ramanathapuram | 10th Re Exam Result | ``உங்க பொண்ணு ஆப்சென்ட்''.. பெற்றோர் தலையில் பேரிடியாய் இறங்கிய 10ம் வகுப்பு மாணவியின் ரிசல்ட்
ராமநாதபுரத்தில் உடல் நலக்குறைவால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவி, மறு தேர்வு தேர்வு எழுதிய நிலையில், ஆப்ஷன்ட் போட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ராமேஸ்வரம் சல்லி மலை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ்-லட்சுமி தம்பதியின் மகளான ஐஸ்வர்யா என்பவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். உடல்நலக்குறைவால் பொதுத் தேர்வு எழுத முடியாமல் போன மாணவி, மறுதேர்வை எழுதியுள்ளார். ஆனால் அறிவியல் தேர்வில் 'ஆப்சென்ட்' என குறிப்பிடப்பட்டுள்ளதால், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார் அளித்தார்.