காதலுக்கு YES கல்யாணத்துக்கு NO ஆசை காதலியை எரித்து கொன்ற காதலன்

Update: 2025-04-22 05:04 GMT

காதலியை கொலை செய்து காட்டுபகுதியில் எரித்த காதலனை ஒரு வாரத்திற்கு பின் போலீஸார் கைது செய்துள்ளனர். பெற்றோர் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த மதுரையை சேர்ந்த மாரியம்மாளும் நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சமீப நாட்களாக மாரியம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி பிரவீனை கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிவீன் அவரை கன்னிவாடி அடுத்துள்ள அமைத்திச்சோலை அருகே உள்ள காட்டுபகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்து, உடலை எரித்துவிட்டு தப்பி சென்றிருக்கிறார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்