திருச்சியில் தாழ்வாக பறந்த விமானம் - என்னாகுமோ?.. பீதியில் உறைந்த மக்கள்
திருச்சி மாவட்டம் துறையூரில் சிறிய ரக விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என தெரிவித்தனர்.
இதனால், விமானம் எங்கிருந்து வருகிறது, எந்த நோக்கத்திற்காக பறக்கிறது என்பது குறித்து பொதுமக்களிடையே அச்ச உணர்வு நிலவுகிறது.