புது மின் இணைப்புக்காக லஞ்சம்.. மின்சாரம் போல் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை..

Update: 2025-12-20 08:57 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த பயனாளி சுகன்யாவிடமிருந்து லஞ்ச பணத்தைப் பெற்றபோது வணிக ஆய்வாளர் இளையராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்