Hash oil | Rameswaram | பாம்பனில் சிக்கிய கஞ்சா ஆயில்.. இதன் மதிப்பு இத்தனை கோடிகளா..!
பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ கஞ்சா ஆயிலை நாட்டுப்படகுடன் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் சுங்கத்துறையினருடன் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.